மச்சி!! அவ உன்னதான்டா பார்க்குறா!!!
பக்கத்து கேபின்ல “டொக்கு டொக்குன்னு” சவுண்ட் வந்துச்சு.எப்பவும் நம்ம பிரவீன் code அடிக்கமாட்டானே? எப்பவும் காபி பேஸ்ட் தானே? இன்னைக்கு என்ன புதுசா ஏதோ சத்தம்லாம் வருதுனு எட்டிப்பார்த்தேன். பயபுள்ள ஆன்ராய்ட் மொபைல இங்கிட்டும் அங்கிட்டும் ஆட்டிகிட்டு இருந்துச்சு . “ பிரவீனு என்னடா பண்ற?“ “matrimonial application டா !!,பொண்ணு தேடிட்டு இருக்கேன் “. “என்னது பொண்ணு தேடிட்டு இருக்கியா ? அப்போ நீ வேலை செய்யலையா?” “போடா டேய் இங்க பல பேரு இந்த … Continue reading
நஸ்ரியா….கண்கள் தான் அவள் உருவம்.
முஸ்லிம் பெண்கள் …என்றைக்கும் எனக்கு ஆச்சரியமாகவே தெரிகிறார்கள். கடைத்தெரு வீதி,எல்லா ஊர்களிலும் இந்த தெரு இருக்கும்..அங்கே சில முஸ்லீம் வீடுகளும் இருக்கும். நான் இப்பொழுது ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் கூலி வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பணக்காரன்.அமெரிக்காவில் வசித்து வருகிறேன்.இன்று வழக்கம் போல் காஞ்ச ரொட்டி ,அதாங்க பீசா சாப்பிடும் பொழுது ஒரு முஸ்லிம் பெண் படுதா போட்டு நடந்து போவதை பார்த்தேன்…எனக்கு என் நஸ்ரியா ஞாபகம் வந்தது. நாமக்கல் கடைத்தெரு வீதி…அங்கே ஒரு முஸ்லிம் குடம்பம் …அங்கே ஒரு … Continue reading
ஹாஸ்டல் – பேய்களும் பேய்கள் சார்ந்த இடமும்
என் பெயர் காவ்யா.பலருக்கு பேய்களை பார்க்கனும்னு ஆசை.இன்னும் சிலர் பேய்கள நம்ப மாட்டாங்க ஆனா இது ஒரு உண்மைக்கதை. இது எனக்கு நடந்தது. நான் ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன்.அது ஒரு அரசு கலைக்கல்லூரி.என் ஊரிலிருந்து கல்லூரி வெகு தூரம் என்பதால் நான் கல்லூரி திறக்க மூன்று நாட்கள் முன்னரே வந்து விட்டேன். எனக்கு 8th பிளாக் ,ரூம் நம்பர் 9.அந்த பிளாக் பார்க்க பேய் பங்களா மாதிரியே இருந்துச்சு.ஆனா எனக்கு சின்ன வயசுல இருந்து … Continue reading
தோசைக்கரண்டி – உங்க அம்மா தோசை சுட தான் லாயக்கு
தமிழிசை அழகான தமிழ் பெயர்ல?. நம்ம கதைப்படி தமிழிசையோட நினைவுகள் வழியா அவள் வாழ்க்கையில் நாம் பயணிப்போம். என் பெயர் தமிழிசை. எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான் பேரு மலரவன்.என் புருஷன் பேரு ஷங்கர். நான் “ஹோம் மேக்கர்”. “ஹவுஸ் வைப்”நு சொல்லுவேன்னு நினைச்சீங்களா?.வீட்டு வேலைக்கு ஆள் வச்சு ,கால் மேல கால் போட்டு சீரியல் பார்த்தா தான் “ஹவுஸ் வைப்”. நான் காலைல 5 மணிக்கு எந்திரிச்சு வாசக்கூட்டி ,கோலம் போட்டு ,சமையல் … Continue reading
நூற்றி எட்டு தேங்காய் -மைக்ரோ கதை
விக்கி பைக்கில் 100கிமீ வேகத்தில் போய்க்கொண்டு இருந்தான்.ஹெல்மெட் அணியவில்லை.போனில் அவன் காதலி சுஜா.இரண்டு வருடக்காதல். விக்கியின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.விக்கிக்கு எல்லாமே அவன் அம்மா தான்.அம்மாவிடம் அவன் காதல் மேட்டரை போட்டு உடைக்க தான் அவன் கோவிலுக்கு போய்க்கொண்டு இருந்தான். கோவிலுக்கு எதுக்கு? வேற எதுக்கு சாமிக்கு டிப்ஸ் குடுத்துட்டு போனா, காரியம் நல்லா நடக்கும்னு நினைக்குறது என்ன போல சில சாமானியர்களின் நம்பிக்கை. போனில் சுஜா,பைக்கில் இவன்… “விக்கி ,சீக்கிரம் என் மாமியார் கிட்ட … Continue reading





