தோசைக்கரண்டி – உங்க அம்மா தோசை சுட தான் லாயக்கு

தமிழிசை அழகான தமிழ் பெயர்ல?. நம்ம கதைப்படி தமிழிசையோட நினைவுகள் வழியா அவள் வாழ்க்கையில் நாம் பயணிப்போம். என் பெயர் தமிழிசை. எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான் பேரு மலரவன்.என் புருஷன் பேரு ஷங்கர். நான் “ஹோம் மேக்கர்”. “ஹவுஸ் வைப்”நு சொல்லுவேன்னு நினைச்சீங்களா?.வீட்டு வேலைக்கு ஆள் வச்சு ,கால் மேல கால் போட்டு சீரியல் பார்த்தா தான் “ஹவுஸ் வைப்”. நான் காலைல 5 மணிக்கு எந்திரிச்சு வாசக்கூட்டி ,கோலம் போட்டு ,சமையல் … Continue reading

Rate this:

“இருபத்தொன்பது மீனு இருக்கு இன்னும் ஒன்னு எங்க??”.

நீங்க மீன் புடிச்சு இருக்கீங்களா?ஆமாவா இல்லயா..?அது ஒரு சுகமான அனுபவம்.அட மீன புடிச்சு சாப்டுறது இல்லைங்க,அத வீட்டுல வச்சு வளர்க்கனும்.அதுவும் ஆத்து(ஆற்று) மீனு. எனக்கு 7 வயசு இருக்கும்.எனக்கு பெரியப்பா பசங்க ரெண்டு பேரு.பெரிய அண்ணன் பேரு ராஜேஷ்,சின்ன அண்ணன் பேரு விக்கி.மீன் பிடிக்குறதுக்காக எங்க அம்மாச்சி ஊருக்கு போவோம்.ஊரு பேரு ஜேடர்பாளயம்.இது ஒரு அழகான கிராமம்னும் சொல்லலாம்.ஆறு,வாய்க்கால்,அணைக்கட்டு எல்லாம் இருக்கு.எங்க திரும்புனாலும் அழகான கரும்பு தோட்டம்,வாழத்தோட்டம் எல்லாம் இருக்கும்.ஊரும் மக்களும் விவசாயத்தயும்,நெசவுத்தொழிலயும் ரொம்ப நம்பி இருக்காங்க.கூடவே மீனவங்களும் … Continue reading

Rate this:

பேபி அக்காவின் தற்கொலை!!??

இங்கே நான் யாருக்கும் அறிவுரை கூறப்போவதில்லை.இங்கே நான் யார் தவறையும் சுட்டிக்காட்ட போவதில்லை.எனக்கு தெரிந்தது,என் காதுக்கெட்டியது,நான் பார்த்தது அதன் பதிவிது. இறந்தவர்கள் எழுந்துவந்து கூறும் வரை அவர்கள் இறந்ததன் காரணம் தெரியப்போவதில்லை.எனக்கும் பேபி அக்கா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று சரியான காரணம் தெரியவில்லை.வாருங்கள் தேடலாம். நான் அப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நியாபகம்.அன்று காலை நான் சயின்ஸ் பரீட்ச்சைக்கு படித்துக்கொண்டிருந்தேன்.திடீரென்று போன் அடித்தது. அம்மா சமையல் செய்துட்டு இருந்தாங்க.நான் தான் எடுதேன்.அந்த பக்கம் பெண் … Continue reading

Rate this:

அப்பா!!!- நாம் தாண்ட , தான் சரியும் சுவர்

   அப்பா ,நம்மில் எத்தனை பேர் அப்பாவிடம் இப்பொழுது மனம் விட்டு பேசுகிறோம்?? சரி,இது ரொம்ப கஷ்டமான கேள்வி, இப்போ வேற கேட்குறேன்.நம்மில் எத்தனை பேர் அம்மாவிடம் பேசும் அளவிற்க்கு அப்பாவிடம் பேசுகிறோம்???.அட்லீஸ்ட் அதில் பாதி?? ஹ்ம்ம்ம் ,மனம் இந்த கேள்வியை ஏற்க்க மறுக்கிறதா? .அப்படி என்றால் இதை தொடர்ந்து படியுங்கள்.   அம்மாவின் அரவணைப்பு ,நாம் கருவறையில் துளிர்க்கும் பொழுதே ஆரம்பிக்கிறது.ஆனால் அப்பாவின் பாசம்??,நம் அம்மாவை தன் மனைவியாக ஏற்க்கும் அந்த நிமிடம் ,“நம்ம பையன … Continue reading

Rate this:

நூற்றி எட்டு தேங்காய் -மைக்ரோ கதை

விக்கி பைக்கில் 100கிமீ வேகத்தில் போய்க்கொண்டு இருந்தான்.ஹெல்மெட் அணியவில்லை.போனில் அவன் காதலி சுஜா.இரண்டு வருடக்காதல். விக்கியின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.விக்கிக்கு எல்லாமே அவன் அம்மா தான்.அம்மாவிடம் அவன் காதல் மேட்டரை போட்டு உடைக்க தான் அவன் கோவிலுக்கு போய்க்கொண்டு இருந்தான். கோவிலுக்கு எதுக்கு? வேற எதுக்கு சாமிக்கு டிப்ஸ் குடுத்துட்டு போனா, காரியம் நல்லா நடக்கும்னு நினைக்குறது என்ன போல சில சாமானியர்களின் நம்பிக்கை. போனில் சுஜா,பைக்கில் இவன்… “விக்கி ,சீக்கிரம் என் மாமியார் கிட்ட … Continue reading

Rate this: