ஆசையே ஏலியன்

எதற்க்காக படித்தேன்? எதற்காக வேலைக்க்குச் சென்றேன் ?
எதை தேடி என் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது ?
நிறைவு என்று தான் வரும் ?
ஏலியனின் கண்கள் தான் ஆசையோ ?.

இல்லாத ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறேன்
எது என் வழி ? எது என் பயணம் ?
சொல்வோர் யாருமிலர்.
நான் எடுக்கும் முடிவுக்குத் தடை ஏதும் இல்லை.
ஒருவேளை,அது தான் தடையோ?
ஏலியனின் கண்கள் தான் ஆசையோ ?.

அவர் சொன்னார் நான் மருத்துவர் ஆவேன் என்று
இவர் சொன்னார் நான் பொறியாளன் ஆவேன் என்று
எவரும் சொல்லவில்லை நான் எப்பொழுது நான் ஆவேன் என்று
எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கின்றேன்
ஏலியனின் கண்கள் தான் ஆசையோ ?.

என்று வரும் அமைதி
என்று வரும் சாந்தம்
என்று தெரியும் நான் யார் என்று
எப்பொழுது தெரியும் எனக்கு என் முகவரி

அனைத்தையும் மறந்து ஆரம்பித்த என் பயணம்
மாதங்கள் ஓடியும்
இது முடிந்ததா என்று தெரியவில்லை
இது தான் முடிவா ?
அதுவும் புரியவில்லை

எது தான் என் ஆசையின் எல்லை ?
எது தான் அமைதியின் ஆரம்பம்?
ஆசையே ஏலியன்.

Comments
3 Responses to “ஆசையே ஏலியன்”
  1. இந்த நினைப்புக்கும் ,ஏலியனின்ஆசைதான் காரணமோ 🙂

  2. ilango pk's avatar ilango pk says:

    Sent from Mail for Windows 10

Leave a reply to Bagawanjee KA Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.