பிரேக்கப் தான் பெஸ்ட் – Her Favourite Dialogue
“டேய் ,பிராக்டிக்கல்லா பார்த்தா ,நாம பிரேக்கப் பண்ணிகுறது தான் சரின்னு படுது”
“ஏன்?”
“என் அப்பாக்கும் வயசாகிட்டே போகுது,அம்மாவும் பாவம்,தங்கச்சியையும் நான் பார்க்கணும்ல?”
“என்ன மட்டும் ஏதோ கவர்மென்ட் பெத்துபோட்ட மாதிரியும்,அம்மா மெஸ்ல தான் நான் மூணு வேளையும் சாப்டுற மாதிரி பேசுற”
“நான் அதுக்கு சொல்லலடா……உனக்கும் மாசம் முப்பத்தி அஞ்சாயிரம் தான் சம்பளம்,சென்னைல அத வச்சி குடும்பம்லாம் நடத்த முடியாதுடா..”
“இந்த சம்பளத்துக்கே என்ன வீட்டுக்கு விட மாட்டேன்னு ,ஏதோ “இது எங்கள் சொத்து” ,அப்படிங்குற மாதிரி ஆபீஸ்லையே வச்சுக்குறாங்க..இதுக்கு மேல கேட்டா ,நான் வீட்டுக்கே வரமாட்டேன்,என் சம்பளம் வேணும்னா வீட்டுக்கு வரும்”.
“உனக்கு 22 தான் ஆகுது,இந்த வயசுக்கு இது போதும்,எனக்கு என் குடும்பம் முக்கியம்…நான் சொல்றத கேளு”
“சரி,உன் இஷ்டம்”

இது நடந்து ரெண்டு வருஷம் ஆகுது..இன்னும் கொஞ்சம் நேரத்துல எனக்கு கல்யாணம்..நான் இப்போ மாப்பிளை ரூம்ல உக்காந்து இத எழுதிட்டு இருக்கேன்….breakup ஆகி ரெண்டு வருஷம் ஆகுது..எங்க காதல் கதைய நீங்களும் கொஞ்சம் கேளுங்க.
நான் +1 படிச்சுட்டு இருந்தேன்,அவளும் தான்,ஆனா வேற வேற கிளாஸ்.அவ தான் முதல்ல வந்து என்ன பிடிச்சு இருக்குகுன்னு சொன்னா.உடனே நான் அழகன்னு பெரும பேசல. அவ அழகி…நான் கொஞ்சம் பார்க்குற மாதிரி இருப்பேன்னு வச்சுகோங்க.
நான் என் அம்மாகிட்ட எல்லாமே சொல்லிடுவேன்,லவ்வையும் தான்,அம்மாக்கு ஓகே.ஆனா +2 ல நல்ல மார்க் வந்துடனும் அண்ட் நல்ல காலேஜ்ல சேர்ந்துடணும்,இது தான் கண்டிஷன்.
நல்லா தான் லவ் பண்ணோம்.+2 syllabus ஸ்டார்ட் பண்ண சமயம்.என்கிட்டே தனிய பேசணும்னு சொன்னா.
“ஏண்டி ராத்திரி முழுக்க அப்படி தான பேசுறோம்..?”
“இது வேற தனியா”
“சரி”
“டேய்,யோசிச்சு பார்த்தேன்,பிராக்டிக்கல்லா பார்த்தா நமக்குள்ள இது ஒத்து வராதுன்னு தோணுது”
“எது?”
“அதான் …..லவ்”
“ஏன்?”
“+2 வந்துட்டோம்,நல்லா படிக்கணும்,நல்ல காலேஜ்ல சேரணும்..இப்போ லவ் பண்ணிட்டு இருந்தா எப்படி உருப்பட முடியும்?”
“சரி”
பிரிஞ்சுட்டோம்,இன் தி சென்ஸ்…எப்படி சொல்றது…ஹ்ம்ம் பார்போம் ஆனா பேச மாட்டோம்.பேசுவோம் ஆனா சிரிக்க மாட்டோம்.சிரிப்போம் ஆனா லவ்னு சொல்லிக்க மாட்டோம்.
+2 ரிசல்ட் வந்துச்சு,ரெண்டு பெரும் ஒரே மார்க்.நல்ல மார்க்.ஒரே காலேஜ்.
காலேஜ் பேரு CEG.

CEG,ஒரு சொர்க்கம்.படிக்க,ஊரு சுத்த,லவ் பண்ண,எல்லாத்துக்கும்.நம்ம வாழ்க்கை நம்ம கைல.உருப்படனும்னு நினைச்சா உருப்படலாம்,வெளங்காம போகணும்னு நினைச்சா அதுக்கும் “ஆல் கேட்ஸ் ஆல்வேஸ் ஓபன்”.
காலேஜ் செகண்ட் வீக்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”
“மறுபடியும் மொதல்ல இருந்தா?”
“கொஞ்சம் கிண்டல் பண்ணாம வா….”
“சரி”
அவ எது சொன்னாலும் என் மனசு சரின்னு மட்டும் தான் சொல்லுது.Boys are basically weak and sentimental.Once again ,”Hence Proved”.
“நாம ஏன் திரும்ப லவ் பண்ண கூடாது?”
“திரும்ப? ஹா ஹா …”
“ஏன் சிரிக்குற”
“ஏண்டி ,நாம என்னைக்கு லவ் பண்ணாம இருந்தோம்?”
“ஏதோ ,breakupனு சொன்ன,அப்புறம் friendsனு சொல்லி திரும்ப லவ் தாண்டி பண்ணிட்டு இருந்தோம்?,ஆனா அதுக்கு பேரு மட்டும் “Friendship”,உன் safetyக்கு பேர மட்டும் மாத்துனா அது லவ் இல்லன்னு ஆகிடுமா?”
“சரி,இப்போ லவ்ன்னு அகைன் பேரு மாத்தலாம்”.
“சரி மாத்திக்கோ”.
அப்புறம்,என்ன ?,வழக்கம் போல பீச் ,பார்க்,சினிமா,கிஸ்,பாப்கான்,சல்மான்கான்…எல்லாம்.கொஞ்சம் படிப்பும் தான்.

கடைசி வருஷம்,கேம்பஸ்க்கு நெறைய கம்பெனீஸ் வந்துச்சு.
அவளும் நானும் நாலஞ்சு கம்பெனில உக்காந்தோம்.முதல் ரவுண்டுலையே ஜோடியா வெளிய வருவோம்.
வந்த உடனே அவ மூஞ்ச கூட பார்க்காம ஓடிடுவேன்…இல்லாட்டி அவ அகைன் ப்ராக்டிக்கலா பேச ஸ்டார்ட் பண்ணிடுவா.
ரெண்டு நாள் கழிச்சு..அவகூப்டா…
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”
“என்ன ப்ராக்டிக்கலா பேசணுமா?”
“ஆமா”
“எப்படி உனக்கு மட்டும் இவ்ளோ பிராக்டிகலா தோணுது?”
“சரி நீ….. நிறுத்து..”
“சரி”
“யோசிச்சு பார்த்தேன்…”
“எனக்கு நெக்ஸ்ட் வோர்ட் தெரியுமே…நான் வேணா சொல்றேன்.நீ கரெக்ட்டான்னு சொல்றியா?”
“என் பீலிங்க்ஸ் உனக்கு வெளையாட்டா போச்சா?,நாம இப்படியே ஊருசுத்திட்டு இருந்தா ஒரு எடத்துல வேலை கிடைக்காது..பேசாம breakup பண்ணிப்போம்”
“சரி”
“என்ன டக்குனு சரி சொல்லிட..எவளையாவது பார்த்து வச்சு இருக்கியா என்ன?”
“எங்க பார்க்க விட்ட? breakupன்னு பேருக்கு சொல்லிடு கூடவே தான சுத்திட்டு இருக்க…ஒருத்தி கூட கிட்ட வர மாட்டா”
“சரி நான் ரூம் போறேன்”
“சரி”
ரெண்டு வாரம் கழிச்சு எனக்கு Verizonல வேல கிடைச்சது.அவளுக்கு நாங்க breakup பண்ண ரெண்டாவது நாளே வேலை கிடைச்சது.நல்ல சகுனம்னு அப்படியே என்ன விட்டுட்டா போல..அப்புறம் கோவத்துல படிச்சு வாங்குன வேலை இது.
மூணு மாசம் கழிச்சு..அவ கால் பண்ணா…
“டேய்,என்ன மறந்துட்டியா….”
“இப்போ தான் வேலைக்கு சேர்ந்து ஒரு மாசம் ஆகுது..ஒரு நார்த் இந்தியன் பொண்ணு வழிக்கு வர்ற மாதிரி இருந்துச்சு..அதான் நீ வந்துட்டியே இனிமே அது Take Diversionல போய்டும்…சொல்லு”
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்டா..”
“சொல்லு”
“நாம திரும்ப சேர்ந்தா என்ன?””
“சரி”
“என்னாடா ,டக்குனு ஒத்துகிட்ட?”
“விதி யார விட்டுச்சு?,எப்படியாது இவளை வச்சு நார்த் இந்தியாவ சுத்தி பார்க்கலாம்னு இருந்தேன்..சரி விடு என் பீலிங்க்ஸ் எனக்கு”
“உனக்கு ஆனாலும் ரொம்ப கொழுப்புடா”
“சரி வா சினிமா போலாம்”
அப்புறம் என்ன அகைன் காதல் லீலைகள்,சினிமா,ECR ride,MGM,மாயாஜால்..எல்லாம் நல்லபடியா போச்சு.ஆனா ஒவ்வொரு தடவையும் breakupன்னு பேருக்கு தான் சொல்லுவா..ஆனா எனக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சா போதும் ஓடி வந்து என் அம்மா மாதிரி பார்த்துப்பா.”காதல் மலர்கள் பூக்கும் தோட்டத்தில் பிறந்த தேவதை அவள்”
ஒருவருஷம் கழிச்சு…
“டேய் உன்கிட்ட தனியா பேசணும்…”
“அடங்கப்பா..இந்த trademark வசனத்தை நீ விடவே மாட்டியா?”
“இல்ல,இது ரொம்ப சீரியஸ்”
“சரி சொல்லு…”
இதுக்கு அப்புறம் நடந்த conversation தான் நீங்க முதல்ல படிச்ச பாரா.மறந்துடுசுனா அகைன் போயிட்டு படிச்சுகோங்க.
அதுக்கு அப்புறம் நான் அவ போக்குல விட்டுட்டேன்..ஏதோ மாப்பிள்ளை US ஆம்,மாசம் 2lacsன்னு சொன்னா,வாழ்த்துக்கள் சொல்லிட்டு வச்சுட்டேன்.
அப்புறம் அவள பத்தி யோசிக்கல.ஒருத்தங்க நம்மள வேணாம்னு சொல்லிட்டா,அப்படியே விட்டுடணும்..அவங்கள சும்மா தொந்தரவு பண்ணகூடாது…நாம வேணும்னு நினைச்சா அவங்களே திரும்ப வருவாங்க…யாரு அவங்க கூட இருந்தாலும் ,அது உண்மையான நட்பா,காதலா இருந்தா கண்டிப்பா நாம தான் வேணும்னு திரும்ப வருவாங்க.ஆனா அவ வரல….ஆனா என் மனசு சொல்லுச்சு..அவ வராததுக்கு கண்டிப்பா ஏதோ காரணம் இருக்கு…

ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல…“இதெல்லாம் இப்போ தான் உனக்கு தோணுதா?..இதெல்லாம் லவ் பண்ணும் முன்னாடியே யோசிக்க மாட்டியான்னு கேட்டேன்,அதுக்கு அவ சொன்னா…எனக்கு அப்போ விவரம் பத்தலைன்னு”
“ஏண்டி,+2 ல மார்க் எடுத்தா தான் நல்ல காலேஜ் கிடைக்கும்ன்னு முக்கி முக்கி படிச்சு மார்க் வாங்குற விவரம் ,ஏன் லவ் பண்ணும் முன்னாடி ,நமக்கு பின்னாடி தங்கச்சி இருக்கா நாம பொறுப்பா இருக்கணும்னு யோசிக்க வைக்க மாட்டேந்து ?”
இதுக்கு அவ சொன்ன பதில்…”தெரியல”.
இந்த ஒரு கோவம் தான் அவ மேல எனக்கு….எதையும் லேட்டா யோசிப்பா…
அப்புறம் ஏதோ முக்கி முனகி ,என் வயசு 25 ஆகும் போது என் சம்பளம் 70 கிட்ட வந்துச்சு.
எனக்கு பொண்ணு பார்க்க ஸ்டார்ட் பண்ணாங்க,நானும் சரின்னு சொல்லிட்டேன்.
அப்போ தான் நான் பார்த்தேன்…போட்டோ collectionsல இவ போட்டோ….இவளுக்கு இன்னுமா கல்யாணம் ஆகல?
“அப்போ அந்த USA மாப்புள?”
அவளுக்கு கால் பண்ணேன்…
“ஏண்டி இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?”
“எனக்கு ஜாதகத்துல ஏதோ பிரச்சனையாம்..என்ன கல்யாணம் பண்ணா ,பையனுக்கு ஒரு வருஷத்துல உயிர் போயிடுமாம்”
“இத ஏன் என்கிட்டே சொல்லல?”
“சொன்னா ,நாம திரும்ப சேர்ந்துடுவோம்..என்னால உனக்கு எதாவது அகிடுசுனா?”
“இது தான் நீ என்கிட்டே திரும்பி வராததுக்கு காரணமா?”
“ஆமா”
“சரி,என் சம்பளம் இப்போ 70k,என்ன கல்யாணம் பண்ண நீ ரெடியா?”
“என்ன வெளயாடுறியா? எனக்கு உன் உயிர் முக்கியம்”
“எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கையில்ல…நான் உன்ன லவ் பண்றேன் ..இன்னமும்…இப்படி தான் நான் பொறந்த உடனே எங்க தாத்தா செத்துடுவார்ன்னு சொன்னான் ,ஜோசியக்காரன்,இதெல்லாம் பார்த்தா நாம வாழ முடியாது”
“ஓகே ,நாம கல்யாணம் பண்ணிப்போம்”
“ஆனா ஒரு சத்தியம் நீ பண்ணனும்..”
“என்னடா?”
“இனிமே நீ பிராக்டிக்கலா …யோசிக்க கூடாது”
“ஹா ஹா …சரிடா மாமா”
அவ்ளோ தாங்க எங்க ஸ்டோரி…
இதோ இன்னும் கொஞ்சம் நேரத்துல அவ கழுத்துல தாலி கட்ட போறேன்…அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட நான் சொல்லணும்…..
“என் தாத்தா அந்த ஜோசிக்காரன் சொன்ன மாதிரி ,நான் பொறந்த உடனே நெஞ்சு வலி வந்து இறந்துட்டாரு”
அப்புறமும் ஏன் நான் இவள கல்யாணம் பண்றேன்னு கேட்குறீங்களா?
“Becoz,பசங்களுக்கு பிராக்டிகலா யோசிக்க தெரியாது..Boys are sentimental,ஒரு வருஷம் கழிச்சு நான் இருப்பேனா இல்லையானு தெரியாது….ஆனா இன்னும் ஒரு வருஷம்….அகைன் நாங்க லவ் பண்ண போறோம்..அவ கூட வாழப்போற அந்த ஒரு வருஷம் போதும் எனக்கு”
அப்புறம்.. சொல்ல மறந்துட்டேன்….கல்யாணத்துக்கு மறக்காம வந்துடுங்க….
இப்படிக்கு,
விஜய்.


wow, awesome story…..