வாசித்ததில் வசீகரித்தவை

வாசித்ததில்  வசீகரித்தவை
1) புத்தகம்
புத்தகத்தின் பெயர் – விரல்கள் பத்தும் மூலதனம்
ஆசிரியர் – இரா.மோகன்

READING

இங்கே இப்புத்தகத்தில் இருப்பதை நான் அப்படியே நம் பேச்சு நடைக்கு மாற்றி கொஞ்சம் என் கருத்துகளை தூவி மசாலா படம் போல் தந்து இருக்கிறேன்.
அ.புதுமைப்பித்தன்
அவ்வையாரின் ஆத்திசூடியை புது விதமாக இங்கே புதுமைப்பித்தன் நம் காலத்திர்ற்கு ஏற்றாற்போல் கூறுகிறார்
“அறம் செய்ய விரும்பு ஆனால் செய்யாதே”
இதை தானே இன்றைய அரசியல்வாதிகள் செய்கிறார்கள்?.ஏன்? நாம் கூட தான் !!!.

காஞ்சனை என்ற நூலில் அவர் கூறியதை நான் இங்கே சற்று மாற்றி கூறுகிறேன்

“இந்த உலகமே ஒரு இருதயமற்ற கூட்டம், எனக்கு மட்டும் நெற்றிக்கண் இருந்தால் அவர்களை எல்லாம் எரித்து சாம்பலாக்கி இருப்பேன்,அது இல்லாததால் என்னையே எரிக்க சாராய கடைக்கு சென்றேன்”

இவ்வுலகில் நடக்கும் அநியாயங்களை பார்க்க முடியாமல் அவைகளை சகிக்க முடியாமல் தன்னை தானே அழித்துகொள்ளும் ஒரு சாமானியனின் எண்ண ஓட்டங்களை இரு வரிகளில் தெளிவு படுத்தியுள்ளார் பித்தன்.

ஆ.கலைவாணர் என்.எஸ்.கே

ஒரு கூடத்தில் கலைவாணர் பேச ஆரம்பித்தார் “லேடிஸ் அண்ட் ஜென்டில்மென்…..”.
கூட்டத்தில் உள்ள அனைவரும் கலைவாணர் ஆங்கிலத்தில் பிச்சு உதற போறார் என்று இருக்கையின் நுனிக்கு வந்தார்கள் ,அப்பொழுது கலைவாணர் கூறியதை கேளுங்கள் , “அவ்ளோ தாங்க எனக்கு தெரிஞ்ச இங்கிலீசு நான் தமிழ்லயே பேசிடுறேன்”.

2) சமீபத்தில் நான் ரசித்த t-ஷர்ட் quote – “My blood group tells my character , B+ve”

j1244
3) தற்கொலைகள் பற்றிய ஒரு ஆராய்ச்சி முடிவு

தற்கொலை செய்து கொண்ட ஒருவரது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் அவனது முன்னோர்கள் இதே போல் தற்கொலை செய்துள்ளது தெரியவரும்.அதாவது “இப்பொழுது உள்ள ஒருவனுக்கு தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கினால் ,கண்டிப்பாக அவனின் கொள்ளுத்தாத்தாவிற்கு அந்த எண்ணம் இருந்து இருக்கும் என்கிறார்கள்”.ஆச்சரியமான உண்மை இது.

4)ஹைக்கூ

“பத்தாவது தடவையாக விழுந்தவனை
முத்தமிட்டு சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?”

Comments
One Response to “வாசித்ததில் வசீகரித்தவை”
  1. Shweta's avatar Shweta says:

    Sir ur video was really very motivate me. Plz share book to read for prelims in english its a humble request.

Leave a reply to Shweta Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.