கொசுக்கடி (CEG TIPS)

இப்போ நம்ம காலேஜ்ல முக்கிய பிரச்சனை கொசுக்கடி தான் .அதுவும் இந்த ஹாஸ்டல் பசங்க படுற பாடு …கேட்டா நாய் கூட கண்ணீர் வடிக்கும்.அதனால அதில் இருந்து தப்பிக்கவும் அப்புறம் அதை ஆக்கபூரவமா மாற்றவும் சில ஐடியாக்கள்.

1)400 ரூபாய் கொடுத்து கொசு வலை வாங்கினாலும் கொசு மட்டும் தான் உள்ளார இருக்கு.சோ,இனிமே கொசுவ வலைக்குள்ள விட்டுட்டு நீங்க வெளிய வந்து படுத்துக்கோங்க.(டென்ஷன் ஆகாதீங்க மேல படிங்க).

2)இங்க பாதி பேரு கொசு பேட்ல கொசு அடிச்சு அடிச்சு சானியா மிர்சா,மகேஷ் பூபதி மாதிரி  specialist ஆகிடாங்க ,so ஒலிம்பிக்ல டென்னிஸ் மாதிரி கொசு அடிக்கிற போட்டி வச்சா நம்ம ஆளுங் தான் first place.

12848214-mosquito-hunter

3)நம்ம காலேஜ்ல எவ்ளோ நாள்  ஜிம்க்கு போனாலும் உடம்பு வாட்டர் tank மாதிரி குறையவே மாட்டேங்குது பீல் பண்றவங்க எல்லாம் 6th பிளாக் பக்கம் கொஞ்சம் வந்து டெய்லி இரண்டு மணி நேரம் கொசு அடிச்சா ரெண்டே வாரத்துல வாட்டர் tank வத்தி போய்டும்.

4)முன்னாடிலாம் கொசு ஒரு எடத்துல நின்னாலோ இல்ல உட்கார்ந்தாலோ தான் கொசு கடிக்கும்.இப்போலாம் நடக்க நடக்க கடிக்குது,பாதி பேரு ரோட்டுல டான்ஸ் ஆடிட்டு தான் வாராங்க.சோ,நம்ம காலேஜ் culturalsல கொசு டான்ஸ்னு ஒன்னு வச்சு எப்படிலாம் ஆடுனா கொசு கடில இருந்து தப்பிக்கலாம்னு ஒரு compettion வைக்கலாம்.

5)ரூம் கதவை தொறந்தாலே கவுன்ட்டர் ஓபன் பண்ண அன்னதான மடம் மாதிரி கொசுலாம் புசு புசுனு உள்ள வந்துடுது,சோ பேசாம எல்லா கொசுவையும் உள்ள விட்டுட்டு நீங்க வராண்டால பாய் போட்டு படுத்துகோங்க.

6)நெறையா ரத்தம் இருக்குறவங்க “ஏங்க தேவையில்லாம கொசுவுக்கு வேஸ்ட் பண்றீங்க?” ,பேசாம நம்ம காலேஜ் YRCக்கு  போய் டெய்லி ரெண்டு பாட்டில் கொடுத்துட்டு வந்தா, கொசுவும் ரத்தம் இல்லாம ஏமாந்து போகும் ,உங்களுக்கும் புண்ணியமா போகும்.(சைடு கேப்ல சோசியல் சர்வீஸ் செய்வோம்ல!!! :p)
images (1)

7) எது எதுக்கெல்லாமோ கிளப் இருக்கு,கொசு அடிக்குரவங்க கிளப்னு ஒன்னு இல்ல நம்ம காலேஜ்ல,அப்படி ஒரு கிளப் ஆரம்பிச்சு, டெய்லி கொசு அடிப்பது எப்படின்னு கிளாஸ் வைக்கலாம்(இதுக்கு 1௦௦%  attendace கண்டிப்பா வரும்).

8)ஹாஸ்டல்ல வாரத்துல 6 நாள் குளிக்காத கேசுங்க நெறையா இருக்கு,அவங்களாம் இந்த வாரத்துல 6 நாளுக்கு பதிலா மாசத்துல ஒரு நாள் மட்டும் குளிச்சா,கொசு என்ன? ,ஒரு நாய் கூட கிட்ட வராது.

images

9)இந்த allout already out ஆகிடுச்சு,கொசு batlல அடிச்சு அடிச்சு கைவலி வந்தது தான் மிட்சம்,மார்டீன் கொளுத்தி மண்டை காஞ்சுபோச்சு,odomos போட்டாலும் கொசு ஓட ஓட வெரட்டுது , இதுக்கு மேலயும் கொசுவ ஒழிக்க வேற வழி தெரியலனா .இதுக்கு ஒரே வழி தான் இருக்கு.தூங்கும் போது உங்கள சுத்தி ஒரு current வேலி அமைச்சு சுவிட்ச் on பண்ணிடுங்க.ஒன்னா கொசு சாகும் இல்ல நீங்க சாவீங்க,எப்படியோ கொசு தொல்ல போச்சு இல்ல?? 😛

10) என்ன பண்ணியும் கொசு போகலையா? ,ரொம்ப கடுப்பா இருக்கா?,நாம இங்க இவ்ளோ கஷ்டபடுறோம் அங்க Dean,VC,HOD லாம் நல்லா a/c பெட்ரூம்ல தூங்குறாங்கனு கடுப்பா இருக்கா?,சரி கொசுவ தான் ஒழிக்க முடியல ,அட்லீஸ்ட் இவங்க தூக்கத்தையாவது ஒழிப்போம்,அவங்க வீட்டுக்கு கால் பண்ணி “நீங்க வெறும் டீன் ஆ,இல்ல ……… DEAN ஆ” னு,மானே தேனே பொன்மானேனுலாம் போட்டு கடுப்பு ஏத்துங்க..இப்போதைக்கு இது தான் முடியும்.

இப்படிக்கு,

இன்ஜினியரிங் எடுத்து வாழ்க்கையை தொலைத்து,இப்பொழுது கொசுவால் தூக்கத்தை தொலைத்து நிற்பவன்.

நன்றி.

Comments
9 Responses to “கொசுக்கடி (CEG TIPS)”
  1. madhu's avatar madhu says:

    nice….

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.