“இருபத்தொன்பது மீனு இருக்கு இன்னும் ஒன்னு எங்க??”.

நீங்க மீன் புடிச்சு இருக்கீங்களா?ஆமாவா இல்லயா..?அது ஒரு சுகமான அனுபவம்.அட மீன புடிச்சு சாப்டுறது இல்லைங்க,அத வீட்டுல வச்சு வளர்க்கனும்.அதுவும் ஆத்து(ஆற்று) மீனு.

எனக்கு 7 வயசு இருக்கும்.எனக்கு பெரியப்பா பசங்க ரெண்டு பேரு.பெரிய அண்ணன் பேரு ராஜேஷ்,சின்ன அண்ணன் பேரு விக்கி.மீன் பிடிக்குறதுக்காக எங்க அம்மாச்சி
ஊருக்கு போவோம்.ஊரு பேரு ஜேடர்பாளயம்.இது ஒரு அழகான கிராமம்னும் சொல்லலாம்.ஆறு,வாய்க்கால்,அணைக்கட்டு எல்லாம் இருக்கு.எங்க திரும்புனாலும் அழகான கரும்பு தோட்டம்,வாழத்தோட்டம் எல்லாம் இருக்கும்.ஊரும் மக்களும்
விவசாயத்தயும்,நெசவுத்தொழிலயும் ரொம்ப நம்பி இருக்காங்க.கூடவே மீனவங்களும் இருக்காங்க.

 

சரி இப்போ நாம மேட்டருக்கு வருவோம்.

அனேகமா நான் போன ஜென்மத்துல மீனவனா பொறந்து இருப்பேன் போல.எங்க ராஜேஷ் அண்ணாவுக்கு முன்ன இருந்தே பரம்பர பரம்பரயா மீன் பிடிச்சு வந்து இருகாங்க எங்க குடும்பத்துல.அட,மீன் பிடிக்குறதுனா வலய யூஸ் பண்ணி இல்லைங்க,தாத்தாவோட லுங்கி,பாட்டியோட பாவாடை,அப்பாவோட துண்டு எல்லாமே  எங்களுக்கு, எங்க எஃஸ்பெண்டபல்ஸ் டீமோட வெப்பன்ஸ் தான்.மீன் பிடி வெப்பன்ஸ்னு சொல்லுவோம்.அப்பாவோட துண்ட எடுத்துட்டு ,ஒரு இட்லி துண்டு எடுத்துட்டு போனா
எந்த மீனும் அழகா லட்டு மாதிரி மாட்டும்.இட்லி துண்டு எதுக்குனு கேட்க்குறீங்களா? அது மீன் பிடிக்க தான்.

இட்லி சுட்ட துணிய எடுத்து ஆத்து தண்ணில அலசி விட்டா மீனுங்க அப்படியே மொய்க்கும்.பட்,ஒரு சின்ன பிராப்ளம்,ஒரு  அக்கா கூட அங்க துணி துவைக்க முடியாது.

மீன் எப்பவுமே கலங்குன தண்ணிக்கிட்ட நெறயா  இருக்கும்.ஆத்துல துணி துவைக்குற அக்காங்க எல்லாம் பாவாடய நெஞ்சு வரைக்கும் ஏத்தி கட்டிகிட்டு கேரளத்து சேட்ச்சி மாதிரி தான் துணி துவைப்பாங்க(அப்போ எனக்கு 7 வயசு தான் நான் ரொம்ப சின்ன பையன்,சொ எந்த திங்கிங்கும் வேணாம்,நான் ரொம்ப நல்ல பையன்).நாங்க இட்லியோட மீனுக்காக வெய்ட் பண்ணீட்டு இருப்போம்.மீனு ஒன்னு கூட மாட்டாது.

சரினு,நாங்க துணி துவைக்குற அக்காங்க காலயே பார்த்துட்டு இருப்போம்(இப்பவும் சொல்றேன் அப்போ எனக்கு 7 வயசு).ஏன்னா,நான் முன்னயே சொன்ன மாதிரி கலங்குன தண்ணில தான் மீனுங்க நெறயா இருக்கும்.அந்த அக்காங்க துணி துவைச்ச தண்ணி ரொம்ப கலங்குன நால,அங்க மீனுங்க அலைமோதும்.நாங்களும் பொறுத்து பொறுத்து
பார்போம்,ஒரு மீனு மாட்டாது,சரினு களத்துல எறங்கிடுவோம்.

அந்த அக்காங்க காலு தான் நாங்க மீன் புடிக்குற ஸ்பாட்.ஒரு அக்கா துணி துவைக்க முடியாது.அட்லீஸ்ட் தலபிறட்டையாவது பிடிக்காம விட மாட்டோம்.அக்காங்க எல்லாம் பதறி அடிச்சு கீழ பார்ப்பாங்க,

எவண்டா அது காலு கிட்ட கபடி ஆடுறதுனு”,

நாங்க சும்மாவிடுவோமா? ஒரு பேபி ஸ்மைல விடுவோம்.

உடனே, 
“யாரு டீச்செர் வூட்டு பேரங்களா?” ,

“ஆம்மாக்கா”,

“சரி ,புடிங்க புடிங்க”.

டீச்செர் வூட்டு பேரங்க,அது நாங்க தான்.எங்க  அம்மாச்சி தான் டீச்செர்.அந்த ஊருலயே மொதல்ல டீச்செர் ஆனவங்க எங்க அம்மாச்சி தான் .அதான் அந்த
மரியாத.

இன்னொரு இன்டெரெஸ்டிங்க் மேட்டெரும்  இருக்கு.

எங்க தாத்தாவும் அம்மாச்சியும் ஒன்னா ஒரே  ஸ்கூல்ல வேலை செஞ்சு ,ஒருத்தர ஒருத்தர் லவ்  பண்ணி,ஜாதகம்லாம் பார்த்து,ஓடி போய் கலியாணம் பண்ணி  கிட்டாங்க.அந்த காலத்துலயே இந்த ரவுசு பண்ணி இருக்காங்க.

ஆனா, இந்த உலகத்துலயே ஜாதகம் பார்த்து ஓடி போனவங்க இவங்க ஒருத்தரா தான் இருக்கும்.

சரி நாம மேட்டருக்கு வருவோம்.

மீன் புடிக்க மீனவங்க காலைல அஞ்சு மணிக்குலாம் ஆத்துக்கு போவாங்க.அவங்க திரும்பி வர 7 மணி ஆகும்.அவங்கள வரவேற்க்க அவங்க பொண்டாட்டிங்க போராங்களோ இல்லயோ..ஆனா நாங்க இருப்போம்.அட, பாசத்துல இல்லைங்க,அவங்க மீன் புடிச்சுட்டு
வருவாங்கள்ள?, அத வேடிக்க பார்க்க.

கரைக்கு வந்து அவங்க நல்ல மீன எல்லாம் எடுத்துக்கிட்டு, சின்ன மீன எல்லாம்
ஆத்துல திரும்ப போட்டுடுவாங்க ..நாங்க அத புடிச்சு பாட்டில்ல போட்டு வீட்டுக்கு ஆச ஆசயா கொண்டு வருவோம்.ஆனா அது வலைல மாட்டுன மீனுல்ல?? அத நால
அடி பட்டு இருக்கும்..வீட்டுக்கு கொண்டு வரதுக்குள்ள செத்து போய்டும்..அத பார்த்து நான் ஒரு ஓரமா ஒக்காந்து அழுதுட்டு இருப்பேன்.

எங்க அம்மாச்சி இதான் சாக்குனு,அந்த மீன பீஸ்  பீஸா வெட்டி சில்லி போட்டுடும்.எல்லாரும் என் கண்  முன்னாடியே அத சாப்ட்டு இருப்பாங்க.நானும் ரொம்ப  கன்ற்றோல் பண்ணி கண்டுக்காத மாதிரியே இருப்பேன்.என் அம்மாச்சி,

“டேய்,ஆச ஆசயா புடிச்சுட்டு வந்த, செத்து போச்சு அது ஆத்மா சாந்தி அடையனும்னா அத சாப்டடனும் ,வந்து  சாப்பிடு டா”,நு சொல்லுவாங்க.அவங்க நோக்கம் தப்பா
இருந்தாலும்,பட் அவங்க டீலிங்க் எனக்கும் புடிச்சு இருந்ததது .சரி வளர்க்க தான் முடியல சாப்பிடயாவது செய்வோம்னு நானும் சாப்டுவேன்.கொஞ்சம் பீலிங்க்ஸ் இருக்கும்..பட் அந்த சில்லி டேஸ்ட்ல அந்த பீலிங்க்ஸ் பறந்து போய்டும். 

அப்புறம் மீன் புடிக்க போய் பஞ்சாயத்த கூட்டுன செய்தி  தெரியுமா உங்களுக்கு?? அடியேன் தான் அத செஞ்சது.

எப்பவுமே கரைல கொஞ்சம் ஆழத்துல தான் படக கட்டி வச்சு இருப்பாங்க.மீனுங்க எப்பவும் அந்த படக சுத்தி இருக்குற  தண்ணியில நெறயா இருக்கும்.நான் சும்மா விடுவேனா.. படக
சுத்தி சுத்தி வருவேன்.ஊரே அத பார்த்து சிரிக்கும்.பட் ,நமக்கு
கடமை தான் முக்கியம்.

ஒரு நாள் ஆத்துல கொஞ்சம் தூரத்துல ஒரு படகு இருந்துச்சு.நான் நேரா அங்க போனேன்.படக சுத்தி மீசை மீனு(நான் வச்ச பேரு),எனக்கு  ஒரே டைம்ல நூறு குலாப் ஜாமூன பார்த்த பீலிங்க்.உடனே  களத்துல எறங்கிட்டேன்.நானும் படகுக்கு அடியிலே கூட போய் பார்த்துட்டேன் ஊஹும்,

ஒன்னும் மாட்டுற மாதிரி தெரியல..பாவி பையன் படக ஒழுங்கா கட்டல போல,நான்
முட்டி முட்டி அது நட்டாத்துக்கு போய்டிச்சு…நான் என்  வேலைல முமுரமா இருந்தனால அத கவனிக்கல,எந்திரிச்சு  பார்த்த படக கானோம்.அப்புறம் அந்த எடத்துல இருந்து
நானும் கானோம்.கொஞ்சம் நேரம் கழிச்சு வீட்டுக்கு படகுக்கு  சொந்தக்கார அண்ணா வந்தாங்க…அப்புறம் என்ன பஞ்சாயத்து  தான்.வீட்டுல செம டோஸ்.சின்ன பையனால என்ன
விட்டுட்டாங்க.இல்லாட்டி மீன் பிடிக்க அந்த பக்கம் வரக்கூடாதுன்னு சட்டம் போட்டு இருப்பாங்க.“நீங்களே  சொல்லுங்க,படக சரியா கட்டாதது என் தப்பா இல்ல அவன்
தப்பா??”.

சரி ,அடுத்த எப்பிசோட் ரொம்ப காமெடி.

ஆத்துல மீன் புடிச்சு  பார்த்து இருப்பீங்க ,கொளத்துல மீன் புடிச்சு பார்த்து
இருப்பீங்க,ஏன் கடல்ல மீன் புடிச்சு கூட பார்த்து  இருப்பீங்க..ஆனா ஓடுர பஸ்சுல மீன் புடிச்சு இருக்கீங்களா??  நான் புடிச்சு இருக்கேன்..நான் மட்டும் இல்லை ,அந்த
பஸ்சையே மீன் புடிக்க வச்சேன்,ஏன் கண்டெக்டர் கூட  பிடிச்சாரு,பிடிக்க வச்சேன்.

அதே 7 வயசு,குட்டி மீனுங்கள தான்  அப்போ என்னால பிடிக்க முடியும்,ஒரு நாள் ஜேடர்பாளயம் போனா கூட நான் ,மீன் பிடிக்காம வர மாட்டேன்.அன்னைக்கும் அப்படிதான்,அம்மா ,பெரியம்மா ,நான்  மூனு பேரும் ஊருக்கு போய்ட்டு திரும்ப பஸ்  ஏறுனோம்.

சும்மா ஏறல,ஒரு பிலாஸ்டிக் பாட்டில் நெறயா  மீனுங்க.பஸ் கெளம்புச்சு.பரமத்தி வர கன்னு மாதிரி  முழிச்சுட்டு தான் இருந்தேன்,ஆனா அப்புறம்  மட்டயாகிட்டேன்.பஸ் சட்டென் பிரேக் போட ,பாட்டில்  தெரிக்க,மூடி பறக்க,மீனு எல்லாம் பாட்டில விட்டு தெரிச்சு  குதிக்க,நான் ஒப்பாரிவைக்க,டிரைவெர் பஸ்சயே  நிறுத்த,கண்டெக்டர் முதற்க்கொண்டு எல்லாரும் பஸ்லயே  மீன புடிச்சு என் பாட்டில போட்டாங்க,ஏன்னா நான் விட்ட
சவுண்ட் அப்படி.

டிரைவெர் ,தான் குடிக்க வச்சு இருந்த  தண்ணிய எடுத்து என் பாட்டில ஊத்துன அப்புறம், நான்  ஒன்னு சொன்னேன் ,அத கேட்டு பஸ்ஸே காண்டு ஆகிடுச்சு,” இருபத்துதொன்பது மீனு இருக்கு இன்னும் ஒன்னு எங்க??“.

இந்த கூத்துலாம் ஜுஜுபி..இன்னும் ஒன்னு இருக்கு.அது எங்க  தாத்தா காண்டு ஆனது.

தாத்தா எப்பவும் கொசு வலை கட்டிகிட்டு தான்  தூங்குவாரு.அவருக்கு அது இல்லாம தூக்கம் வராது.நான் மீன் புடிக்குற அண்ணாங்கள பார்த்து இருக்கேன்,எல்லாரும் ஒரு
வலை வச்சு இருப்பாங்க.அதுல ஈசியா மீன் மாட்டும்.என்  மனசுல ஒரு ஐடியா,”நாமும் அந்த மீன் வலைல மீன் புடிச்சா  ஈசியா மீன் மாட்டும்ல??”.அடுத்த நாள் காலைல,தாத்த கொசு
வலை,என் கைல.நேரா,ஆத்துக்கு போனேன்.

அங்க போய்  அவங்க வலையும் என் வலையும் கம்பேர் பண்ணி  பார்த்தேன்.அதுல ஓட்டைலாம் பெருசு பெருசா இருந்துச்சு  ,அப்புறம் என்ன,நானும் ஒரு பிளேடை எடுத்து கொசு வலய  பெருசு பெருசா கிழிச்சேன்,இப்போ அத கொண்டு போய்  ஆத்துல போட்டு கரைல உட்காந்து வேடிக்க பார்த்துட்டு  இருந்தேன்,ஒரு 2 மணி நேரம் கழிச்சு எடுத்து பார்தேன்,மாட்டி இருந்துச்சு,மீன் இல்ல,பிஞ்ச செருப்பு.சரி தாத்தா எந்திரிச்சு  இருப்பாருனு அவசரம் அவசரமா வலய கொண்டு போய்  திரும்ப வச்சுடேன்.அடுத்த நாள் அவரு கொசு வலய எடுக்க,அது மீன் வலய மாறுன கதைய நான் சொல்ல,என்ன  அவரு தெரு தெருவா தொறத்த,அது ஒரு மீன்  சரித்திரம்.

எனக்கு மீனுன்னா,அவ்ளோ உயிர். இப்பவும் அந்த  நியாபகங்கள் சற்று முன் பூத்த பூக்கள் போல் மனம்  வீசும்,அந்த மீன அங்க புடிச்சு,அத ஒரு பாட்டில  போட்டு,நாமக்கல் வரைக்கும் கொண்டு போய்,அத எங்க  தொட்டில விட்டு அது நீந்துர அழக பார்க்கும் போது “100 SPM class cancel “ ஆன மாதிரி சந்தோசம் இருக்கும்.அத  அனுபவிச்சா தான் தெரியும்.

ஆனால் அந்த கிராமத்து நாட்க்கள்  ,என் மீன் களுடன் நான் அனுபவித்த கிராமத்துநாட்க்கள் என் வாழ்னாளில் நான்  பெற்ற பெரிய செல்வம்,அது கொடுத்த  அந்த பூரிப்பு,சின்ன சின்ன ஆச்சரியங்கள்,என் வாழ்க்கையில்  நீங்காத இடம் எப்பவும் இருக்கும்.ஏன்னா ஒரு டவுன்ல 

 பொறந்த எல்லா பசங்களுக்கும் கிராமத்து வாழ்க்கை  கிடைக்குறது ரொம்ப கஸ்டம்,ஆனா எனக்கு கிடைச்சது. 

 

அப்புறம் 9th,10th,+1,+2,நாலு வருஷம் அந்த பக்கம் நான் போகல.+2  லீவ்.பிரண்ட்ஸ்லாம் எங்கயாவது பக்கத்துல இருக்குர ஊருக்கு  பைக்குல போகலாம்னு பிளான் போட்டாங்க.நான் சொன்ன  இடம் ஜேடர்பாளயம்.எல்லாரயும் எங்க ஊருக்கு கூட்டிட்டு
போனனேன்.ஆச ஆசயா நான் மீன் புடிச்ச எடத்த பார்க்க  போனேன்.ஆனா அங்க நான் பார்த்தது எனக்கு ரொம்ப மனசு கஸ்டமா இருந்துச்சு.

“ஆறு முழுக்க சாக்கடை  தண்ணி,சாயக்கழிவுனு ரொம்ப மோசமா  இருந்துச்சு.முன்னாடிலாம் மீனுங்களாம் கரைல்லயே நீந்தும்  இப்போ ஒரு மீனு காணோம்,ஆறு ரொம்ப குழியா
இருந்துச்சு,எறங்கவே பயமா இருந்துச்சு,அங்க துணி  துவைக்குற அக்கா என்ன அடயாளம் கண்டுகிட்டாங்க,

“யாரு டீச்செர் பேரனா??”,

“ஆமாக்கா”,

“ஆளே அடயாளம் தெரியாத அளவுக்கு மாறிட்ட தம்பி”,

“ஆமாக்கா,ஏன் இங்க மீனே இல்ல,எல்லாம் எங்க போச்சுக்கா??,

“இன்னும் நீ இந்த மீன்  புடிக்குற பழக்கத்த விடலயாப்பா??”,

“இல்லைக்கா,நீங்க சொல்லுங்க”,

அது,எல்லாம் சாயத்தண்ணி கலந்தனால,மீனு  எல்லாம் செத்து போச்சு,பெரிய மீனுங்க எல்லாம் ஆழத்துக்கு  போச்சு,படுபாவி பசங்க,போன மே மாசம்,ஆத்துல தண்ணி
வத்தி போன சமயத்துல ,நெரமாசமா இருந்த ஆத்த,இப்படி  மண்ணா அள்ளி இப்படி குண்டும் குழியுமா ஆக்கிட்டாங்க  தம்பி,

ஆத்துல இப்போ மணலே இல்ல,இப்போ எங்க ஆத்துல நாங்க எறங்குறதுக்கே பயமா இருகுப்பா,போன வாரம் கூட  ஒரு பையன் அந்தா தெரியுது பாரு அந்த பள்ளத்துல மாட்டி  செத்து போய்ட்டான் தம்பி,நீ தயவு செஞ்சு எறங்காதப்பா,எங்க ஆறு,எங்க வளம்,இப்போ அதுலயே எங்கள எறங்க விடாமா  பண்ணீட்டாங்க இந்த மண் அள்ளுரவங்களும்,ரியல் எஸ்டேட்  காரங்களும்”.

“சரிக்கா ,நான் எறங்குல”.

நான் மீன் பிடித்த,ஓடி திரிந்த இடம் இப்பொழுது எனக்கு சொந்தம் இல்லை.அதன்
வளங்கள் இப்பொழுது எனக்கு சொந்தம் இல்லை,மனம்  நொந்து திரும்பினேன்.அன்றிலிருந்து எங்கே மண் லாரியை  பார்த்தாலும் எனக்கு மனம் வேகும்,கோவம் வரும்.நான்
அனுபவித்த சந்தோசம்,எனக்கு மகிழ்ச்சியை கொடுத்த அந்த கிராமத்து வாழ்க்கை என் பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ கிடைக்க போவது இல்லை.

நல்லவேளை,1990இல் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.ஏனென்றால்,இந்த நாட்டின் இயற்ற்கை வளங்களை கடைசியாக அனுபவித்தவர்கள் அவர்கள் தாம்,அதே நேரத்தில் அவர்கள் தாம் இந்த இயற்க்கை வளங்கள் தன் கண் முன்னே அழிய வேடிக்கை பார்த்தவர்கள்.

நாம் தான் இயற்க்கையின் முடிவும்,அழிவின் ஆரம்பமும்.நாம் தான் அனைத்திற்கும் சாட்ச்சி.கொஞ்சம் பின்னால் திரும்பி பாருங்கள்,நீங்க அனுபவிச்ச எந்த
இயற்க்கை வாழ்க்கையும் உங்க பசங்களுக்கு கிடைக்க போரது இல்லை.

அவரகள் இந்த டெக் உலகில் மயங்கி,எதுவும் அனுபவிக்காத தானியங்கி கருவிகளாக
வாழப்போகிறார்கள்.அதுக்கு நாமே காரணம்.

இனிமெல் எங்கயாவது ஒரு மணல் லாரி பார்த்தீங்கன்னா,அது ஒரு கிராமத்தின் அழிவுன்னு நினைச்சுகோங்க..இயற்க்கை அழிந்து
கொண்டிருக்கிறது.


“என்றைக்கு இயற்கை வளங்களுக்கு இந்த உலகம் ஒரு விலை நிர்ணயம் செய்ததோ,அன்றைக்கே நம் அழிவு ஆரம்பித்துவிட்டது,இந்த லட்சனத்தில் அதில் ஊழல் வேறு.” 

Comments
10 Responses to ““இருபத்தொன்பது மீனு இருக்கு இன்னும் ஒன்னு எங்க??”.”
  1. sekar's avatar sekar says:

    nice to read.. it rewinds my childhood memories!!

  2. thaanx machan,thats wat i want

  3. Charu Raghu's avatar Charu Raghu says:

    Super vejay 🙂 🙂

  4. Super boss, but this post was little long, try to trim it.
    //” இருபத்துதொன்பது மீனு இருக்கு இன்னும் ஒன்னு எங்க??“.// excellent

  5. நன்றி தலைவா …நிச்சயம்

  6. subhag's avatar subhag says:

    “சின்னஞ்சிறு சிறுமியாய் தாமிரபரணியில் மீன் பிடித்து விளையாடிய நாட்களை நினைவுப்படுத்தியது உன் கதை ” – நன்று 🙂 🙂

    • நீங்களுமா?? அப்போ நாம எல்லாம் ஒரே கேஸ் தான்..ஆனா அந்த நாட்கள் எல்லாம் என்றும் திரும்பாது…நினைவுகள் மட்டுமே மிச்சம்.

  7. நன்றி அண்ணா.பரவாயில்லை.நீங்கள் பாராட்டியதே எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

Leave a reply to vejayinjananam Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.