என் முதல் சிறுகதை – நெற்றிக் காசு…
சந்தோஷ் ஒரு தனியார் கம்ப்பனியில் சூபர்வைசராக வேலை செய்கிர்றான்.மாத சம்பளம் வீட்டு லோன் வண்டி லோன் எல்லாம் போக 13,000ரூபாய் வரும்.சாந்தியும் குடும்பத்தை நன்றாக ஆட்சி செய்தால். ஒரு வருடம் களித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.சந்தோஷ் மனதில் ஆண் பெண் என்று பேதம் இல்லை.அதனால் அவன் மகிழ்ச்சியுடன் தன் காதல் பரிசை தூக்கி கொஞ்சினான்.ஆனால் சாந்திக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டதே என்று மனதில் ஒரு ஓரமாய் கவலை.
சந்தோஷ் தன் மகளுக்கு “செல்வராணி” என்று பெயரிட்டான்.செல்வா நல்ல பிள்ளையாக துடிப்புடன்..ஸ்மார்ட் பெண் ஆக 18 வருடம் ஓடியது..செல்வா அழகு பெண் ஆனால்.தாய்க்கு கவலை வந்த்து..பின்ன? செல்வாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாமா?
சந்தோஷும் இரவு பகல் பாராமல் வேலை செய்தான் .இதற்க்கு நடுவில் ஒரு காதல் துளிர் விட துவங்கியது.செல்வா ,காதல் வயபட்டாள்.அவன் வேரு யாரும் இல்லை,செல்வாவுடன் கல்லூரியில் படிக்கும் வாசு தான்.நல்ல பையன்.ஆல் பார்க சூரியா மாதிரி இருப்பான்(நான் சூரிய ரசிகன் அல்ல!!).செல்வா தன் காதலை அம்மாவிடம் மட்டும் கூறினாள்.
சாந்திக்கு வருத்தம் தான்..ஆனால் இவள் நல்லதொரு வீட்டில் வரதச்சணை கம்மியாக குடுத்து கலியாணம் செய்து வைத்து விடலாம் என்று முடிவில் இருந்தாள்.செல்வா காதலிக்கும் செய்தி கேட்டவுடன் இவளுக்கு மனதில் ஒரு ஆசை.என்னவென்றால், காதலித்து திருமணம் செய்யும் எந்த வீட்டிலும் வரதச்சணை நெறையா கேட்க மாட்டார்கள்,நமக்கும் செல்வு மிட்ச்சம் என்று நினைத்து அவள் காதலுக்கு க்ரீன் லைட் காட்டினால்.
ஒரு வழியாக செல்வா கல்லூரி படிப்பை முடித்தாள்.வீட்டில் கலியான பேச்சு ஆரம்ப்பம் ஆனது.தன் காதல் விஷயத்தை தன் தந்தை இடம் கூறினாள்.சந்தோஷை பற்றி தான் நமக்கு தெரியுமே?..தன் பிள்ளையின் வாழ்க்கை தான் இவனுக்கு முக்கியம்.வாசுவை குடும்பத்துடன் பெண் பார்க்க வர சொன்னான்.
அது ஒரு வெள்ளிகிழமை.அனைவரும் ஒரு எதிர்பார்புடன் இருந்தார்கள்.மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்.காபி,பஜ்ஜி,பலகாரம் எல்லாம் முடிந்து ஏப்பம் விட்டனர்.வாசுவின் அம்மா பேச ஆரம்பித்தார்..”என்னதான் காதலிச்சாலும் எங்க குடும்பதுக்குனு ஒரு கௌரவம் இருக்கு அதனால,வர போற மருமக கோடி கோடியா கொண்டு வரலனாலும் ஏதோ நாங்க சொல்றது மட்டும் செய்யுங்க அது போதும்” என்றாள்.
சந்தோஷ் மனதில் திக்திக் என்றிருந்தது…அவர்கள் வாய் கூசாமல் தங்களுக்கு பிச்சையாக என்ன வேண்டும் என்பதை லிஸ்ட் போட்டு கேட்டார்கள்.சந்தோஷ் மனதில் ஓடியது “50 பவுன்..எப்படியாவது சமாளிக்கலாம்..கல்யான செலவு முழுவதும்…பிரச்சணை இல்லை..ஆனால் மாபிள்ளைக்கு கார்??..” சந்தோஷ் சம்மதித்தான்.மாபிள்ளை வீட்டார் சென்றனர்.செல்வா ஒரு வித களக்கத்துடன் தூங்க சென்றாள்.
சந்தோஷ் ஒரு வழியாக எல்லாவற்றயும் செய்து தன் மகளை அவள் காதலனுடன்..மணமக்களாய் அனுப்பி வைத்தான்.மூன்று மாதம் ஓடியது…செல்வா அப்பொழுது தான் புரிந்துகொண்டாள் ,வாசு அம்மா பிள்ளையாக அம்மா எது சொன்னாலும் சரி சொல்லும் பிள்ளையாக இருக்கிறான் என்று.
அவள் மாமியார் திடீர் என்று செல்வாவிடம் “உன் வீட்டுக்கு போய் 20பவுன் நகையுடன் இங்க வா..இல்லாட்டி அப்படியே போய்விடு” என்றாள்.வாசுவும் அமைதியாக நின்றான்.செல்வா அழுதுகொண்டே தன் வீட்டுக்கு சென்றாள்.சந்தோஷ் மனம் உடைந்து போனான்.தன் மகள் கஷ்ட படுவதை பார்க்க அவனால் முடியவில்லை.தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் சென்று கடன் கேட்டான்..அவனால் சிறிது அளவு கூட திரட்ட முடியவில்லை.செல்வா அவள் பிறந்த வீட்டில் இருந்தே வேலைக்கு சென்றாள்.இதற்கு நடுவில் வாசு ஒரு நாள் கூட செல்வாவுக்கு கால் செய்து பேசவில்லை.அவன் தான் அம்மா பிள்ளை ஆயிற்றே??.
சந்தோஷ் தன் ஆசை மகளுக்கு ‘வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே’ என்று எண்ணி எண்ணி படுத்த படுக்கை ஆனான்.செல்வாவுக்கு தன்னால் தான் தன் தந்தை இப்படி ஆகிவிட்டார் என்ற கவலை.ஒரு நாள் சந்தோஷுக்கு திடீரென்று நெஞ்சு வலி வந்தது…ஹொஸ்பிடல் கொண்டு சென்றனர்.டாக்டர் ஹார்ட் அட்டாக் என்று கூறினார்.செல்வாவுக்கு தூக்கி வாரி போட்டது..
அப்பொழுது வாசு வந்தான்.தன் மாமனாரை பார்க்க.” இதுபோன்ற மனிதர்கள் காசுக்காக யாரயும் பலி குடுக்க தயங்க மாட்டார்கள்..பலி குடுத்தபின் வெட்கமே இல்லாமல் மரியாதை நிமித்தமாக பிணத்திற்கு மாலை போட வருவார்கள்”.அப்படி தான் வாசு தன் மாமனாரை பார்க்க வந்தான்.அப்பொழுது செல்வா எதோ எழுதி வாசுவின் கையில் குடுத்தாள்.அதை படித்த வாசு ,தன்னை ஒரு கேவலமான பிறவி போல் உணர்ந்தான்..அதில் இருந்த வார்தைகள்,”இன்னும் என் அப்பா சாகவில்லை..அவர் இறந்த பின்பு வா..வந்து அவரின் நெற்றி காசயும் எடுத்துச்செல்.”





topic nalla irukku story also nice da 🙂 all the best 🙂
Thanks di
nice…… 🙂