“இருபத்தொன்பது மீனு இருக்கு இன்னும் ஒன்னு எங்க??”.
நீங்க மீன் புடிச்சு இருக்கீங்களா?ஆமாவா இல்லயா..?அது ஒரு சுகமான அனுபவம்.அட மீன புடிச்சு சாப்டுறது இல்லைங்க,அத வீட்டுல வச்சு வளர்க்கனும்.அதுவும் ஆத்து(ஆற்று) மீனு. எனக்கு 7 வயசு இருக்கும்.எனக்கு பெரியப்பா பசங்க ரெண்டு பேரு.பெரிய அண்ணன் பேரு ராஜேஷ்,சின்ன அண்ணன் பேரு விக்கி.மீன் பிடிக்குறதுக்காக எங்க அம்மாச்சி ஊருக்கு போவோம்.ஊரு பேரு ஜேடர்பாளயம்.இது ஒரு அழகான கிராமம்னும் சொல்லலாம்.ஆறு,வாய்க்கால்,அணைக்கட்டு எல்லாம் இருக்கு.எங்க திரும்புனாலும் அழகான கரும்பு தோட்டம்,வாழத்தோட்டம் எல்லாம் இருக்கும்.ஊரும் மக்களும் விவசாயத்தயும்,நெசவுத்தொழிலயும் ரொம்ப நம்பி இருக்காங்க.கூடவே மீனவங்களும் … Continue reading
பேபி அக்காவின் தற்கொலை!!??
இங்கே நான் யாருக்கும் அறிவுரை கூறப்போவதில்லை.இங்கே நான் யார் தவறையும் சுட்டிக்காட்ட போவதில்லை.எனக்கு தெரிந்தது,என் காதுக்கெட்டியது,நான் பார்த்தது அதன் பதிவிது. இறந்தவர்கள் எழுந்துவந்து கூறும் வரை அவர்கள் இறந்ததன் காரணம் தெரியப்போவதில்லை.எனக்கும் பேபி அக்கா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று சரியான காரணம் தெரியவில்லை.வாருங்கள் தேடலாம். நான் அப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நியாபகம்.அன்று காலை நான் சயின்ஸ் பரீட்ச்சைக்கு படித்துக்கொண்டிருந்தேன்.திடீரென்று போன் அடித்தது. அம்மா சமையல் செய்துட்டு இருந்தாங்க.நான் தான் எடுதேன்.அந்த பக்கம் பெண் … Continue reading
அப்பா!!!- நாம் தாண்ட , தான் சரியும் சுவர்
அப்பா ,நம்மில் எத்தனை பேர் அப்பாவிடம் இப்பொழுது மனம் விட்டு பேசுகிறோம்?? சரி,இது ரொம்ப கஷ்டமான கேள்வி, இப்போ வேற கேட்குறேன்.நம்மில் எத்தனை பேர் அம்மாவிடம் பேசும் அளவிற்க்கு அப்பாவிடம் பேசுகிறோம்???.அட்லீஸ்ட் அதில் பாதி?? ஹ்ம்ம்ம் ,மனம் இந்த கேள்வியை ஏற்க்க மறுக்கிறதா? .அப்படி என்றால் இதை தொடர்ந்து படியுங்கள். அம்மாவின் அரவணைப்பு ,நாம் கருவறையில் துளிர்க்கும் பொழுதே ஆரம்பிக்கிறது.ஆனால் அப்பாவின் பாசம்??,நம் அம்மாவை தன் மனைவியாக ஏற்க்கும் அந்த நிமிடம் ,“நம்ம பையன … Continue reading
நண்பனின் பிரிவு -தரும் வலி
பிரிவு ஒன்னு தான் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாதது.அது தரும் வலி எதற்கும் ஈடாகாது. ஒரு மனிதன் பிறக்கும் போதே பிரிவின் வலியை உணர்கிரான்.சில பிரிவுகள் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நம்மை புரட்டிபோட்டுவிடும்.சில பிரிவுகள் நமக்கு முன்னாடியே வரும் என தெரியும்,அந்த நொடியை எதிர் கொள்ள தினம் தினம் நாம் நம்மை நம் மனதை தயார் செய்கிறோம் . முதல் ரகம்,ஒரு நொடியில் வரும் மரண ஓலம்.இரண்டாவது,தினம் தினம் வரும் மரண பயம். மொத்தத்தில் பிரிவு,நாம் உணரும் … Continue reading





