இலவசம் – உருவான கதை
சமீபத்தில் நான் இந்திய பொருளாதார சர்வே படித்தேன். அப்பொழுது அதில் இருந்த சில தகவல்கள் என்னைக் கவர்ந்தன. அதில் இருந்து மூலக்கருத்தை மட்டும் எடுத்து ,என் எண்ணங்களையும் சேர்த்து எழுதிய பதிவு.
ஏன் நாம் இலவசங்களை நேசிக்கின்றோம் ? . சின்ன மளிகை கடைகளிலிருந்து அரசாங்கம் வரை நாம் இலவசம் என்றால் நம்முடைய கொள்கைகளையும், நம்முடைய உரிமைகளையும் அடகு வைக்க தயங்குவதில்லை. அந்த இலவசம் நமக்கு பயனற்ற ஒன்றாகவோ அல்லது ஏற்கவனே நம்மிடம் உள்ள பொருளாகவே இருந்தால் கூட நம் மனம் அதை நோக்கிச் செல்கிறது. ஏன்?
இப்பொழுது நாம் வெறும் அரசாங்கம் தரும் இலவசங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
மக்களாட்சி என்பது மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நடுவில் ஏற்பட்ட உடன்படிக்கையால் நடத்தப்படும் ஒரு ஆட்சி முறை (social contract). உதாரணத்திற்கு, நாம் வரி கட்டுகின்றோம், அரசாங்கம் நமக்கு ரோடு போட்டுக்கொடுக்கின்றது.
சரி, இப்பொழுது எதற்கு இந்த இலவசம் ?. அது தான் அரசாங்கம் ரோடு போட்டுக் கொடுக்கின்றதே? .
அதற்கு நாம் சோசியலிசம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
சோசியலிசம் என்பது நம் அரசியலமைப்புச் சட்டத்தின் உயிர்நாடி. இதன் உட்கரு , “அனைவருக்கும் சமமான வாழ்க்கை முறை அளிப்பது மூலமாக,அமைதியான நாட்டை உருவாக்குவது. ” இந்த முறை,பகிர்ந்தளிப்பது (redistribution) என்ற குறிக்கோள் கொண்டது ஆகும்.உதாரணம், நானும் அம்பானியும் ஒரே நாட்டுக் குடிமகன்கள். அம்பானிக்கு இந்த நாட்டின் இயற்கை வளங்களை உபயோகப்படுத்தி பணம் சம்பாரிக்க எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமை எனக்கும் இருக்கிறது. ஆனால் என்னிடம் அதற்கான தொழில்நுட்பம் இல்லை. ஆனால் அம்பானியிடம் இருக்கிறது. எனவே அரசாங்கம் அம்பானிக்கு , அந்த இயற்கை வளங்களை உபயோகிக்க உரிமம் தந்து, அம்பானியிடம் (இந்திய மக்களின் மொத்த உரிமையை ஒருவரிடம் விற்றதற்கான) பணத்தை ரெண்ட் மற்றும் டாக்ஸ் ( Rent and Tax ) மூலமாகப் பெற்றுக்கொள்கிறது.
அந்த பணத்தை , மக்களுக்கு ரோடு போடுவது, கல்விக்கூடங்கள் அளிப்பது, மருத்துவமனை கட்டுவது போன்ற முறைகளில் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கிறது.
இங்கே இலவசத்தின் வேலை என்ன ?.
இந்திய மக்கள் தொகையில் மிடில்-கிளாஸ் (middle-class) மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இவர்கள் தான் யார் அரசு அமைக்க வேண்டும் என்று ஓட்டுப் போடுவது மூலம் தீர்மானிப்பவர்கள். நம் போன்ற சிட்டியில் வாழும் ஆட்கள் முகப்புத்தகத்திலும் , கீச்சுகளிலும் தான் புரட்சி செய்கிறோம்.ஓட்டுப்போட போவதில்லை. உதாரணம் சென்னை மற்றும் பெங்களூரில் பதிவான ஒட்டு சதவிகிதம் ( ஜஸ்ட் அபோவ் 5௦%) .
இந்த நடுத்தர வர்க்கம் தான் முறையாக வரி கட்டும் வர்க்கம். ஆனால் இதே நடுத்தர வர்க்கம் தான் அரசாங்கத்தின் எந்த பயன்களையும் உபயோகம் செய்யாத வர்க்கம். இவர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் தான் சேர்க்கிறார்கள், தனியார் மருத்துவமனையைத் தான் நாடுகிறார்கள். அதனால் இவர்கள் அனுபவிக்கும் சலுகைகளை விட, இவர்கள் கட்டும் வரி அதிகம்.
இவர்களுக்கு எந்த அரசாங்கம் வந்தாலும் பெரிதாக மாற்றம் வரப்போவதில்லை. இவர்களின் தேவைகள் எல்லாம் above average. ஆனால் நாட்டில் ஐம்பது கோடி ஏழைகள் உள்ளனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யாமல் போனால் அரசாங்கத்திற்கு எதிரான புரட்சி வெடிக்கும்.
அதனால் அரசாங்கம் முதலில் நல்லக் கல்வியைத் தரவேண்டும், நல்ல மருத்துவ வசதி தரவேண்டும். அனால் அது இப்போதைக்கு நடுத்தர வர்கத்திற்கு தேவை இல்லை, அவர்களுக்கு தனியார் உள்ளது. எனவே அவர்களை இழுக்க ஒரே வழி இலவசம்.
நடுத்தர வர்க்கம் இலவசத்திற்கு மயங்குபவர்கள். அதை உபயோகம் செய்து அவர்களை கவர முயல்கிறார்கள்.

சரி, நல்லது செய்யத் தானே நமக்கு இலவசம் தராங்க? . செஞ்சா நான் ஏன் இதை எழுதப் போறேன் . நம் அரசாங்கம் செலவழிக்கும் 1௦௦ ரூபாயில் வெறும் 5 ரூபாய் தான் கல்விக்கும் மருத்துவத்திற்கும் செல்கிறது . ஆனால் அதிலயும் ஊழல்.
இப்படியே போய்க்கொண்டு இருந்தால் எந்த வித முன்னேற்றமும் அடையாமல் வெறும் இலவச பொருட்களை அடுக்கி வைக்க வேண்டியது தான்.
என்ன செய்ய வேண்டும் , யார் மேல் தவறு ?.
அத்தியாவசியம் இல்லாத இலவசங்களை வாங்கும் போது நாம் நம் அரசாங்கத்தை தட்டிக் கேட்க்கும் உரிமையை இழக்கிறோம் .அதான் வாங்கிட்டல்ல ? எதுக்கு கூவுற? .
வரி கட்டாமல் ஏமாற்றும் பொழுது நம் கடமையை செய்யத் தவறுகின்றோம்.(வெறும் 5% வாக்காளர்கள் தான் வரி செலுத்துகிறார்கள், அந்த காசில் தான் இந்தியா இயங்குகிறது)
இவை இரண்டின் மூலமாக, நாம் நம் வாழ்வின் ஐந்து ஆண்டுகளை தேறாத சிலருக்கு அடகு வைக்கிறோம். கொள்கையைப் பார்த்து, அறிக்கைகளை பார்த்து ஓட்டுப்போடுங்கள், இலவசங்களைப் பார்த்து வேண்டாம்.
“இனியாவது மாறுவோம், இலவசங்களை மறுப்போம்”

கமிஷன் அடிக்க இலவசங்களை அள்ளி விடுகிறார்கள் !தரம் இல்லாத பொருட்களால் சுற்றுச் சுழல் மேலும் கெடுகிறது !