என் கீச்சுக்கள்(Tweets)

Follow me @trvias

https://twitter.com/trvias

1) ஒரு இந்திய மொழி படம் பார்க்க கூட ஒரு அந்நிய மொழி தேவைபடுகிறது.#Laagan-with-English-subtitle

2)அம்மா ஆசையில் ஆட்சி நடக்கிறது. அதனால் தான் இது அமாவாசை ஆட்சி #ஸ்டாலின் .அம்மா குடுக்குறாங்க லேப்டாப்பு அதனால இனிமே அது அம்மாடாப்பு#நான்

3)ஊரே காரி துப்புனாலும்,கேவலபடுதினாலும்,அசிங்க படுத்தினாலும்…எதையும் கண்டுக்காம உன் வேலைய நீ செஞ்சா வாழ்க்கைல முன்னுக்கு வரலாம் #POWER STAR

4)காதலியின் திருமணம் , பந்தியில் கடைசியாய் நானும் நாயும்.

5)பேசிகொண்டிருந்த அனைவரும் பிரிந்து சென்றோம்.#கரண்ட் வந்துடுச்சு

6)கல்யாணம் ,நீங்க மாப்பிள்ளை வீடா? இல்ல பொண்ணு வீடா?…வீடே இல்லாதவனிடம் கேள்வி.

7)மதிய சாப்பாடு,இருக்குறவனுக்கு வேலை, இல்லாதவனுக்கு கூலி

8)மன்மோகன் இந்தியாவை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்கிறார்-அமெரிக்கா #இந்தியா எங்க வளருது…அவரு தாடி தான் வளருது.

9)குப்பை தொட்டி வரை போய்விட்டு ,குப்பையை அதன் பக்கத்தில் கீழே கொட்டி வந்தால் அவன் தான் தமிழன்.

10)ரோட்டோர மரங்களை வெட்டி விட்டு ரோட்டின் நடுவே பூச்செடி நட்டால் அவன் தான் மனிதன்.

11)முன்னாடி யெல்லாம் அம்மா கால் பண்ணா,”நல்லா இருக்கியானு” கேட்ப்பாங்க,இப்போ “அங்க கரெண்ட் இருக்கானு தான் முதல்ல கேட்க்குறாங்க” #அம்மாஆட்சி

12)ராமதாஸ் பிரதமருக்கு கடிதம் #அண்ணே அங்க குவாட்டர் என்ன விலை??

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.