நூற்றி எட்டு தேங்காய் -மைக்ரோ கதை

விக்கி பைக்கில் 100கிமீ வேகத்தில் போய்க்கொண்டு இருந்தான்.ஹெல்மெட் அணியவில்லை.போனில் அவன் காதலி சுஜா.இரண்டு வருடக்காதல்.

விக்கியின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.விக்கிக்கு எல்லாமே அவன் அம்மா தான்.அம்மாவிடம் அவன் காதல் மேட்டரை போட்டு உடைக்க தான் அவன் கோவிலுக்கு போய்க்கொண்டு இருந்தான்.

கோவிலுக்கு எதுக்கு? வேற எதுக்கு சாமிக்கு டிப்ஸ் குடுத்துட்டு போனா, காரியம் நல்லா நடக்கும்னு நினைக்குறது என்ன போல சில சாமானியர்களின் நம்பிக்கை.

போனில் சுஜா,பைக்கில் இவன்…

“விக்கி ,சீக்கிரம் என் மாமியார் கிட்ட நம்ம மேட்டெர சொல்லு டா…”

“சொல்றேன் டி,அவசரப்படாத….”

“நாம வேற பேசலாமா சுஜா?”

“வேறன்னா??”

“வேற..நம்ம முதல் கிஸ்!!!!”

” விக்கி நீ பைக்ல போய்ட்டு இருக்க ..நியாபகம் இருக்கா??”

“அடப்போடி….இந்த வயசுல இப்படி தான் இருக்கனும்”

“அது சரி”

“அதான் சரி”.

.”போடா போடா…நான் இந்த விளையாட்டுக்கு வரல ஆள விடு சாமி”

.”விக்கி பின்னாடி என்ன சப்தம்??”

“அது ஒரு ஆம்புலன்ஸ்காரன்..இவங்களுக்குலாம் வேற வேலயே இல்லையா ..சாக போற கிழடுங்கல எல்லாம் பொழைக்க வச்சுட்டு இருக்காங்க..விட்டா மக்கள் தொகையாவது குறையும்”.

“ஆனாலும் விக்கி நீ ரொம்ப மோசம்..முதல்ல ஆம்புலன்ஸுக்கு வழி விடு”.

“முடியாது என்ன பண்ணுவ?” .

“நான் போறேன் பை”.

“சரி தான் போடி..எப்போ பார்த்தாலும் அவ்வையார் மாதிரி அட்வைஸ் பண்ணிட்டு இருக்க”.

கோவில் வந்தடைந்தான்…

“கடவுளே எங்க அம்மா மட்டும் எங்க காதல ஒத்துக்கிட்டா உனக்கு நூற்றி எட்டு தேங்காய் உடைக்குறேன் (“ஹப்பா எப்படியோ, டைட்டில கொண்டு வந்தாச்சு…”)!!!”

“டிங்க் டாங்க் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன்…”,போன் அடித்தது.

“இப்போ யாரு கால் பண்றது ..சாமி கும்பிட கூட விட மாட்டேன்றாங்கப்பா…”.

“சார்,விக்கியா??”.

“ஆமா நீங்க??”.

“நாங்க,மலர் ஹாஸ்ப்பிட்டல்ல இருந்து பேசுறோம் ….சார் உங்க அம்மா??”.

“என் அம்மாவுக்கு என்ன ஆச்சு..தயவு செஞ்சு சொல்லுங்க..”.

“உங்க அம்மா இறந்துட்டாங்க சார்”.

“என்ன சொல்ரீங்க…அம்மா………..”.

“ஆமா சார்,திடீர்னு உங்க அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் ..பக்கத்து வீட்டுக்காரங்க உடனே கால் பண்ணாங்க..அவங்க முதல்ல உங்களுக்கு தான் பண்ணி இருக்காங்க பிஸினு வந்து இருக்கு..நாங்களும் ஆம்புலன்ஸ் எடுத்துட்டு போனோம்..ஆனா”.

“ஆனா..என்ன ஆச்சு சொல்லித்தொலயா…”.

“வர வழில ஒருத்தன் போன் பேசிட்டு பைக்ல போனான்,எங்களுக்கு வழியே விடல..அதுனால அஞ்சு நிமிஷம் லேட் ஆகிடுச்சு சார்..உங்க அம்மாவ காப்பாத்த முடியல…”.

“தவறை தான் செய்து அனுபவித்து உணர்பவன் சாமான்யன்,பிறரின் அனுபவம் மூலம் அந்தத்தவரு தனக்கு நடக்காமல் பார்த்துக்கொள்பவன் அறிவாளி”..நீங்க இதுல எந்த வகை???

Comments
One Response to “நூற்றி எட்டு தேங்காய் -மைக்ரோ கதை”
  1. divya's avatar divya says:

    saema………. 🙂

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.